ஹோலி சிறப்பு ரயில் விட வடக்கு ரயில்வே திட்டம்

Subscribe to Oneindia Tamil

அலகாபாத் (உ.பி.):

ஹோலி பண்டிகை மற்றும் பக்ரீத்தை முன்னிட்டு டெல்லியிலிருந்து பாரானி மற்றும் பாகல்பூருக்குசிறப்பு ரயில்கள் விடப்படும் என்று வடக்கு ரயில்வேகூறியுள்ளது.

இதுகுறித்து வடக்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

புதிய சிறப்பு ரயில்களில் 16 கோச்சுகள் இருக்கும். இரண்டு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளும், 14 பொதுப் பெட்டிகளும் இருக்கும்.

மார்ச் 2, 5, 8 ஆகிய தேதிகளில் இந்த ரயில் டெல்லியிலிருந்து கிளம்பி பாரானி செல்லும். இந்த சிறப்பு ரயில் அலிகார், கான்பூர் மற்றும் லக்னோஆகிய இடங்களில் நிற்கும். டெல்லியிலிருந்து முற்பகல் 11.40 மணிக்குப் புறப்படும்.

இன்னொரு ரயில் டெல்லியிலிருந்து இரவு 7.40 க்குக் கிளம்பும். இது மார்ச் 3, 6 மற்றும் 10 ம் தேதிகளில் கிளம்பிச் செல்லும்.

மேலும் மார்ச் 3, 6, 10 ம் தேதிகளில் டெல்லிக்கும், பாகல்பூருக்கும் இடையே சிறப்பு ரயில் விடப்படும். இது டெல்லியிலிருந்து இரவு 10.50 க்குப்புறப்படும். அடுத்த நாள் 11.15 மணிக்கு பாகல்பூரைச் சென்றடையும். இது அலிகார், கான்பூர், அலகாபாத் தடம் வழியே செல்லும்.

மார்ச் 5, 8, 12 ம் தேதிகளில் டெல்லியிலிருந்து பாகல்பூருக்கு சிறப்பு ரயில் விடப்படும். இது டெல்லியிலிருந்து இரவு 10.15 க்குப் புறப்படும்.

இவ்வாறு வடக்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+