திமுக அணியில் சேர மாட்டேன் .. மாஜி மந்திரி கண்ணப்பன்
சென்னை:
திமுக அணியில் சேருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் கண்ணப்பன் திட்டவட்டமாகதெரிவித்துள்ளார்.
திமுக அணியில் புதிய தமிழ் தேசம் கட்சி சேரப் போவதாக சமீபத்தில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமிஅறிவித்திருந்தார். இதை அடுத்த நாளே அக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் மறுத்தார். இக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளமக்கள் தமிழ் தேசம் கட்சியும் வீராசாமியின் கருத்தை மறுத்துள்ளது.
இக்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கண்ணப்பன் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியுள்ளதாவது:
3-வது அணி உருவாவதைக் காண சகிக்காமல் திமுகவினர் இம் மாதிரியான பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.மக்கள் தமிழ் தேசம் கட்சி, மூன்றாவது அணியை உருவாக்குவதில் முழு மூச்சாக இருக்கிறது.
திமுக அல்லது வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. திமுக அணிக்கு எங்களது கட்சி போகும்வாய்ப்பே இல்லை. அது தொடர்பாக எந்தப் பேச்சும் நடக்கவில்லை.
துவக்கத்திலிருந்தே நான் மூன்றாவது அணி குறித்துத்தான் பேசி வருகிறேன். வேறு கட்சியுடன் கூட்டணி சேருவது குறித்து நான்எப்போதுமே பேசியதில்லை.
மார்ச் 2-வது வாரத்தில் எங்களது கட்சியின் அரசியல் உயர் மட்டக் குழுக் கூட்டம் நடக்கவுள்ளது. அப்போது கூட்டணி குறித்துபேசி முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications