பெருவில் நிலச்சரிவு: 12 பேர் பலி
லிமா:
பெருவில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
பல வீடுகள் இடிந்தன. பெருவில் உள்ள லா லிபர்டேட் என்ற மாகாணத்தில் உள்ள சான்டா எலேனா என்ற கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குஇரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலியானார்கள்.
இதையடுத்து இங்குள்ள அதிகாரிகள், ஹெலிகாப்டர் உதவி கொண்டு உயிரிழந்தோரது சடலங்களை மீட்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு உதவவேண்டும் என்று பெரு அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் நிலச்சரிவைச் தொடர்ந்து ஏற்பட்ட இடியில் சிக்கி 4 கிராமங்களில் மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.
முன்னதாக, தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையில் பாஹூவா, அமேசான் காட்டுப்பகுதி அருகே வசித்து வருபவர்களின் வீடுகள் இடிந்து விழுந்தன.மழையினால் 3,000 க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.
இங்கு வெப்பநிலை 30 டிகிரி சென்டிகிரேட்டுக்கும் மிகக் குறைவாக இருப்பதால் குளிரில் நடுங்கி பொதுமக்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்களும் அதிகம்உள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications