புலிகள் இயக்கத்துக்குத் தடை: நெடுமாறன் கண்டனம்
சென்னை:
இங்கிலாந்தில் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருப்பதற்கு, தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், தமிழ் ஈழ ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுஅமைப்பாளருமான நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் 17 ஆண்டுகளாக நடந்து வரும் இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் புலிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற் கொண்டு வருகிறார்கள்.
அமைதி ஏற்படுத்தற்காக நார்வே தூதுக்குழுவினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த நேரத்தில் இங்கிலாந்து புலிகள்இயக்கத்துக்குத் தடை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
முதலில், அமைதி ஏற்படுத்துவதற்காக நார்வே தூதுக்குழுவினர் கூறும் கருத்துக்களை இலங்கை அரசு அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.அதற்குப் பிறகு இந்தியா உள்பட பல ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல்களுக்குப் பிறகு அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்பட லேசாக முயன்றது இலங்கைஅரசு. இந்த நேரத்தில் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருப்பது சரியல்ல.
இலங்கை அரசு, இங்கிலாந்திடம், புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாகத்தான் புலிகள்இயக்கத்தின் மீது இங்கிலாந்து தடை விதித்துள்ளது.
இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார் நெடுமாறன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications