பூனை, எலிகளால் குதறப்பட்ட சிறுவன்
பொள்ளாச்சி:
பூனை, எலிகளால் கடிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 10 வயதுசிறுவனை பொள்ளாச்சியில் உள்ள சரணாலயம் என்ற குழந்தைகள் காப்பகத்தினர்காப்பாற்றியுள்ளனர்.
இது குறித்து சரணாலயம் குழந்தைகள் காப்பக தலைவி வனிதா கூறுகையில்,பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் 10 வயது சிறுவன் உயிருக்குஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்து நாங்கள் அவனை காப்பாற்றிபராமரித்து வருகிறோம்.
இந்த தன் தாயுடன் வசித்து வந்தான் அவனுக்கு தந்தை கிடையாது. அவனுக்கு 10வயதாகிவிட்டாலும். அவனது உயரம் ஒன்றரை அடிதான். அவனுக்கு வாய் பேசவராது. காதும் கேட்காது. கண் பார்வையும் கிடையாது.
அவனது தாய் அவனை வீட்டில் விட்டு விட்டு சென்று விடுவாள். எப்போதாவது வந்துசாப்பிட ஏதாவது கொடுப்பாள். அதுவரை அந்த சிறுவன் பட்டினிதான்.
அவன் பசிக்கும் போது சத்தம் போடுவான் அருகே உள்ள வீடுகளில் இருப்பவர்கள்ஏதாவது சாப்பிட கொடுப்பார்கள்.
இந்த சிறுவனை நாங்கள் பார்க்கையில் எலி மற்றும் பூனையால் கடிக்கப்பட்டுஉயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.அவனை காப்பாற்றி மருத்துவ சிகிச்சைஅளித்து நாங்கள் பராமரித்து வருகிறோம்.
ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்த இந்த சிறுவன் இப்போது 3நேரமும் 1 இட்லி என்ற அளவில் சாப்பிடுகிறான் என்றார்.












Click it and Unblock the Notifications