குற்றம் செய்யவைத்த முத்தம்!
கோவில்பட்டி:
தனக்கு முத்தம் கொடுக்க மறுத்த மாணவியை மானபங்கம் செய்ய முயன்றஇளைஞருக்கு நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவில்பட்டிக்கு அருகே இருப்பது பீக்கிலிபட்டி மாவட்டம். இங்கு வசித்து வரும்விவசாயி கிருஷ்ணசாமியின் மகள் பள்ளயில் படித்து வந்தாள்.
சமபவ தினத்தன்று கிருஷ்ணசாமியின் மகள் தன் வீட்டிற்கு அருகே தன் தோழியுடன்பேசிக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த முத்துராஜ் (28) கிருஷ்ணசாமியின்மகளை பார்த்து எனக்கு ஒரு முத்தம் கொடு என கேட்டார்.
அதற்கு கிருஷ்ணசாமியின் மகள் மறுக்கவும், முத்துராஜ்அந்த பெண்ணின் கையைபிடித்து இழுத்து தகாத முறையில் நடக்க முயன்றதும், பெண்கள் கூச்சல் போட்டனர்.இதனால் பயந்து முத்துராஜ் அங்கிருந்து ஓடி விட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார்முத்துராஜை பிடித்து ஜூடிசியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி முத்துராஜுக்கு ரூ 350 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications