பெக்கர் - சபரினா காதல் முறிந்தது?
பிராங்க்பர்ட் (ஜெர்மன்):
ஜெர்மனின் முன்னாள் டென்னிஸ் விளையாட்டு வீரர் போரிஸ் பெக்கரும், இந்தியாவில் பிறந்து ஜெர்மனில்வாழும் பாப் இசைப் பாடகியும், பெக்கரின் காதலியுமான சபரினாவும் பிரியப் போவதாக செய்திவெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஜெர்மனில் வெளியாகும் மெயின் டவர் மற்றும் ஹெசிஸ் ரன்ட்பங்க் ஆகிய பத்திரிக்கைகளில்வெளிவந்துள்ள செய்தி:
டென்னிஸ் உலகில் கொடிகட்டிப் பறந்த முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர், பாப் இசைப் பாடகர் சபரினாசெட்லூரின் காதல் உறவு முறிந்தது. இருவரும் தங்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பிரியத்திட்டமிட்டுள்ளனர்.
இனிமேல் அவர்கள் தங்கள் தொழிலில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெக்கரும், சபரினாவும் சந்தித்துப் பேசவில்லை. பொதுமக்கள் முன்னிலையில் ஒன்றாகத்தோன்றவில்லை.
இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை என்பதற்காக அவர்கள்ை இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று கூறமுடியாது. ஒருவேளை அவர்கள் இருவரும் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிக் கொள்ளலாம். மேலும்இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாகி விட்டார்கள்.
இவ்வாறு இரண்டு பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, போரிஸ் பெக்கரும், அவரது மனைவி பார்பாராவும் விவாகரத்து செய்து கொண்ட பின், பெக்கருடன்சேர்த்துக் கிசுகிசுக்கப்பட்டார் சபரினா.
பெக்கர், பார்பாராவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது திருமண வாழ்க்கை 7 வருடங்கள்மட்டுமே நீடித்தது.
இவர்களது விவாகரத்து ஏற்பட்டவுடன் பெக்கருக்கும், சபரினாவுக்கும் காதல் ஏற்பட்டது. வழக்கம் போல்இருவரும் முதலில் மறுத்து வந்தாலும் ஜனவரி மாதம் 9 ம் தேதி தாங்கள் இருவரும் காதலிப்பதாகத் தெரிவித்தனர்.
மேலும் பிப்ரவரி மாதம் சபரினா பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
எனது டேஸ்ட்டும், பெக்கரின் டேஸ்ட்டும் வேறு வேறுதான். இருந்தாலும் நான் அவரை மிகவும் நேசிக்கிறேன்.ஆனால் எங்களது காதல், எங்களது தொழிலைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வோம். நான் பெக்கரின் காதலிமட்டுமல்ல. சிறந்த பாடகி. சிறந்த ஓவியரும் கூட என்று கூறியிருந்தார்.
ஆனால், தற்போது பத்திரிக்கை செய்திகள் பெக்கர் மீண்டும் தனது முன்னாள் மனைவி பார்பாராவை நோக்கியேசெல்வதால் சபரினா அவரிடமிருந்து பிரிந்து விட்டார் என்று தெரிவிக்கின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications