62 தொகுதிகள் கேட்கும் பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 62 இடங்கள்ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம்வலியுறுத்துவோம் என்று பா.ஜ.க.தேசிய உயர்மட்டக் குழு உறுப்பினர் ராமராவ்தெரிவித்தார்.

இதுகுறித்து ராமராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில் பாரதிய ஜனதாகட்சிக்கு 62 இடங்கள் ஒதுக்குமாறு வலியுறுத்துவோம். இதுபற்றி திமுக தேர்தல்குழுவினரும், மூன்று பேர் கொண்ட பா.ஜ.க.தேர்தல் குழுவினரும் ஆலோசனைநடத்துவார்கள்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி நன்கு வளர வேண்டுமெனில் குறைந்த பட்சதொகுதிகளாவது தேவை. கடந்த ஐந்து வருடங்களில் பாஜக தமிழகத்தில் நன்குவளர்ந்து வருகிறது. இந்த முறை நடக்கும் தேர்தலில் 62 இடங்களில் பாஜக வுக்குவெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தமிழகத்தில் பாஜக வை வலிமைப்படுத்துவதற்காகத்தான் நாங்கள் அதிகதொகுதிகளைக் கேட்கிறோம்.

வரும் தேர்தலில் பாஜக தனியான தேர்தல் திட்டத்தை வெளியிடும். இதுகுறித்து பாஜகதலைமை மார்ச் மாதம் 6 ம் தேதி கூடி ஆலோசனை நடத்தும்.

ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக ஒரு போதும் கேட்காதுஎன்றார்.

அவர், திமுக வுக்கு அடுத்தபடியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இரண்டாவதுமிகப்பெரிய கட்சியாக பாஜக இருக்குமா என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+