அமெரிக்காவில் மீண்டும் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்:

அமெரிக்காவில் சியாட்டில் நகரில் 6.8 என்ற ரிக்டர் அளவில் வெள்ளிக்கிழமை அதிகாலையும் நிலநடுக்கம்ஏற்பட்டது.

புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில்1 பில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ள பொருட்கள் சேதமடைந்தன.

இரண்டு நாட்கள் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒரு பெண் பலியாகியுள்ளார். நிலநடுக்கத்தால் ஏற்பட்டஅதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றுதெரிய வந்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டிடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகள், கடைகள், ஹோட்டல்களில்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சியாட்டில் நகரில் 1949 ம் ஆண்டு 7.1 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர்இறந்தனர். அதற்குப்பிறகு ஏற்படும் பெரிய நிலநடுக்கம் இதுவே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+