ஜெ.வுடன் சேர்ந்தால் மூப்பனார் மரியாதையை இழப்பார்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பாட்டாளி மக்கள் கட்சி ஒரு வன்முறைக் கட்சி. அந்தக் கட்சி யை கூட்டணியில் சேர்த்ததன் மூலம் தலித்சமூகத்தையே ஜெயலலிதா அவமதித்து விட்டார் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் அ மைப்பின்தலைவர் திருமாவளவன்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மதச் சார்பற்றகூட்டணியில்தான் (அதிமுக அணி) நாங்கள் இருந்து வந்தோம். ஆனால் இப்போது அந்தக் கூட்டணியில் நீடிப்பதுகுறித்து யோசித்து வருகிறோம்.

பாட்டாளி மக்கள் கட்சி யை அதிமுவில் சேர்த்ததன் மூலம் தலித் சமூகத்தை யே அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா அவமதித்து விட்டார். அக்கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து எங்கள் யாருடனும் ஜெயலலிதாமுன்பே கலந்து ஆ லாசிக்கவில் லை.

பாட்டாளி மக்கள் கட்சி ஒரு வன்முறைக் கட்சி. எனவே இப் போது அதிமுக கூட்டணி யை பலவீனமாக்க என்னவழிகள் இருக்கிற தோ அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்து வருகிறது.

இக்கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை நேரில் சந்தித்துக்கோரியுள் ளேன். அவர் நல்ல தலைவர். நிச்சயம் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது என்ற முடி வை அவர் எடுக்கமாட்டார். அப்படிச் சேர்ந்தால், அவருக்கு இப் போது இருக்கும் மரியா தை போய் விடும். மூப்பனாரின் நல்லமுடிவுக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கி றோம். இன்னும் 2 நாட்களில் எங்களது கட்சியின் முடிவைஅறிவிப் போம்.

பாட்டாளி மக்கள் கட்சியுடன் சேர்ந்து விட்டதால், எளிதாக தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று ஜெயலலிதாதப்புக் கணக்கு போட்டுள்ளார். ஆனால் அது நடக்கப் போவதில்லை. மீண்டும் முதல்வராக அவரால் முடியாது.

தனது அக்காள் மகன் தனராஜை பாண்டிச் சேரி முதல்வராக்கி விடலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் த லைவர்ராமதாஸ் கனவு காண்கிறார். அதற்கு ஜெயலலிதாவும் ஒத்துக் கொண்டுள்ளார் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+