பெண் பயணியிடம் சில்மிஷம் .. ரயில்வே டி.டி. ஆர். கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற பெங்களூர் மெயில் ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடக்க முயன்றதாக ரயில்டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூர் மெயில் ரயிலில் கணவனும், மனைவியும் வியாழக்கிழமை பயணம் செய்தனர். ரயில் ஜோலார்பேட்டை அருகேநெருங்கிக் கொண்டிருந்த போது, டிக்கெட் பரிசோதகர் அவர்களிடம் வந்தார்.
டிக்கெட் டை சோதிப்பது போல நடித்த அவர், அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். இதையடுத்து சக பயணிகள் அந்தடிக்கெட் பரிசோதகரை தடுத்து நிறுத்தினர்.
ரயில் ஜோலார்பேட்டை வந்ததும், நடந்த சம்பவம் குறித்து அந்தத் தம்பதியினர் ரயில்வே போலீஸில் புகார் செய்தனர்.
போலீசார் டிக்கெட் பரிசோதகரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications