கண்ணிவெடி பாதுகாப்பு வாகனம் வாங்க இந்தியா திட்டம்
டெல்லி:
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக கண்ணி வெடியால் பாதிக்கப்படாத வாகனங்களை வாங்க மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் வைக்கும் கண்ணி வெடிக்கு பல ராணுவ வீரர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இதனால் ராணுவ வீரர்கள் பயணம் செய்யும்வாகனங்கள், கண்ணி வெடியால் பாதிப்படையாதவாறு இருக்க வேண்டும்.
கண்ணி வெடித் தாக்குதல்களிலிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்ள 800 பாதுகாப்பு வாகனங்கள் வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்தியஅரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
இதற்கிடையே, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் நாடாளுமன்றத்தில் இதுகுறித்துக் கூறுகையில்,
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களைப் பாதுகாக்க மத்திய அரசு முயல வேண்டும். 1998 ம் ஆண்டு முதல் தீவிரவாதிகள் கண்ணி வெடிகுண்டுகளை அதிகமாகப்பயன் படுத்துகிறார்கள். கண்ணி வெடித்தாக்குதலில் மட்டும் 97 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளும், அசாமில் உள்ள தீவிரவாதிகளும் கண்ணி வெடி வைத்து, ராணுவ வீரர்களைத் தாக்குவதில் கைதேர்ந்தவர்கள்.
மேலும் பூடோ தீவிரவாதிகள், கண்ணிவெடிகளை தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று ராணுவ வீரர்களிடமிருந்து எனக்குத் தகவல்கள்கிடைத்துள்ளது. அதனால் கண்ணி வெடியிலிருந்து தப்பிக்க வாகனங்கள் வாங்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, இந்திய ராணுவம் 1990 ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிலிருது 90 கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்களை வாங்கியது.
இருப்பினும் இதுகுறித்து, ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், 90 வாகனங்கள் என்பது எங்களுக்குப் போதுமானதல்ல. தீவிரவாதிகளின் தாக்குதல்கள்நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இன்னும் அதிகமான கண்ணி வெடி பாதுகாப்பு வாகனங்கள் தேவைப்படுகிறது என்றார்.
கண்ணிவெடி பாதுகாப்பு வாகனம் ஒன்றுக்கு 1,65, 000 டாலர்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications