சாராய வியாபாரியை கொன்ற பிராந்தி கடை ரவுடிகள்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

கள்ளச் சாராயம் விற்று தங்கள் தொழிலுக்கு இடைஞ்சலாக இருந்தவரை பிராந்திகடையைச் சேர்ந்தவர்கள் கடுமையாகத் தாக்கினர். இதையடுத்து கள்ளச் சாராயம்விற்றதாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், சிறையில் அவர் திடீரென இறந்து போனார்.

ஈரோடு மாவட்டம், முருங்கத்தொழுவைச் சேர்ந்தவர் மணி (35). இவர் சாரயம்விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டார். பிப்ரவரி மாதம் 21ம் தேதி கைதுசெய்யப்பட்ட இவர்,ஈரோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கு நெஞ்சுவலியால் அவதிப்பட்ட மணி, மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

கடந்த பிப். 21ம் தேதி இவர் முருங்கத்தொழுவில் சாராயம் விற்பனை செய்தபோதுபிராந்திக் கடையைச் சேர்ந்த 15 பேர் இவரை அடித்துள்ளனர். இதன் பிறகேமதுவிலக்குப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு மணி கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எனவே, பிராந்தி கடைக்காரர்களின் தாக்குதலால் தான் மணி இறந்தார் எனக் கூறிஅவரது உறவினர் மற்றும் மனைவி ஆகியோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

போலீசார் இந்த புகாரின் பேரில், அவரை அடித்தவர்களிடம் விசாரணைமேற்கொண்டுள்ளனர். மேலும், மணியின் உடல் உறுப்புகளை மருத்துவ பரிசோதனைசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+