வரும் தேர்தலில் பல அமைச்சர்களுக்கு சீட் கிடைக்காது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இப்போதைய தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பலருக்கும் அமைச்சர்கள் பலருக்கும் வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புஅளிக்கப்பமாட்டாது என்று தெரிகிறது.

பல தி.மு.க. எம்.எல்.ஏக்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. பல தி.மு.க. எம்.எல்.ஏக்களை தேர்தலுக்குப் பிறகு மக்கள்தொகுதியில் பார்த்ததேயில்லை. அந்த அளவுக்கு மக்களிடமிருந்து பல எம்.எல்.ஏக்கள் அன்னியப்பட்டு உள்ளனர்.

ஊழல்.. ஊழல் என்று தி.மு.க. கூப்பாடு போட்டாலும் அ.தி.மு.க. இன்னும் பலம் இழந்துவிடவில்லை என்பதை போலீசார்நடத்திய ரகசிய சர்வேயும், பல பத்திரிக்கைகள் நடத்திய சர்வேக்களும் தெரிவிக்கின்றன.

இதனால், வரும் தேர்தலில் மண்ணைக் கவ்வாமல் இருக்க தீவிர நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதி எடுத்து வருகிறார். முதல்கட்டமாக மக்களிடம் கெட்ட பெயர் வாங்கிய எம்.எல்.ஏக்களுக்கும் வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புதருவதில்லை என முடிவெடுத்துள்ளார்.

அதேபோல சும்மா அமைச்சர்களாக இருந்து சரியாக செயல்படாத பல அமைச்சர்களுக்கும் வரும் தேர்தலில் சீட் கிடைக்காது எனத்தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+