பெண் சிசுக் கொலை: முன்னணியில் தமிழகம்
சென்னை:
தமிழகத்தில் சட்ட விரோதமாக செய்யப்படும் பெண் கருக்கலைப்புகளின் (அபார்ஷன்) எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெண் கருக் கலைப்புக்கு எதிரான இயக்கம் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
மருத்துவ அறிவோ, படிப்பறிவோ இல்லாத அரைகுறை மருத்துவர்களும், மருத்துவச்சிகளும் தான் இந்த கருக்கலைப்புகளில்அதிக அளவில் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது.
வயிற்றில் இருக்கும் கரு ஆணா, பெண்ணா என்பதை அல்ட்ரா சவுண்ட் கருவிகள் மூலம் தெரிந்து கொண்டு கரு பெண்குழந்தையாக இருந்தால் உடனடியாகக் கலைத்துவிடுகின்றனர்.
தமிழகத்தின் பல சிறிய நகரங்களில் கூட அல்ட்ரா சவுண்ட் கருவிகள் கொண்ட லேப்கள் பெருகி வருவதற்கு, குழந்தை ஆணா,பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள தம்பதிகள் காட்டும் ஆர்வம் தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் பல கிராமங்களிலும் பெண் குழந்தைகளை பிறந்தவுடனே கொன்றுவிடும் கொடூரம் தொடர்ந்து தான் உள்ளது.
1991ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 21 மண்டலங்களில் (பிளாக்குகள்) 10மண்டலங்களில் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் தான் உள்ளனர் என்ற விவரம் தெரியவந்தது.
குறிப்பாக உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக்களை கொல்வது மிகவும் சாதாரணமாக நடந்து வருகிறது. கிராமப் பகுதிகளில்உள்ள படிப்பறிவே கொஞ்சமும் இல்லாத மருத்துவச்சிகள் தான் இந்த கொடுமைகளுக்கு பெரும் துணையாய் இருந்துவருகின்றனர்.
எல்லாவற்றிலும் சாதி வித்தியாசம் உள்ள நமது சமூகத்தில், இந்த பெண் சிசுக் கொலையில் மட்டும் சாதி வித்தியாசமே இல்லை.பெண் கருவை கொல்வது, பெண் சிசுவைக் கொலை செய்வது போன்றவை சாதி வித்தியாசம் இல்லாமல் எல்லா சாதிகளிலும்நடந்து வருகிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொடுமைக்கு தமிழக அரசும் தான் காரணம் என்கிறது ஆய்வு. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பைதஅறிய தடை விதிக்கும் மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசு அமல்படுத்தவே 4 வருடங்கள் எடுத்துக் கொண்டது. இதனால்தான் இந்த சிசு கொலை உத்வேகம் பெற்றது.












Click it and Unblock the Notifications