53 இந்திய ஹஜ் பயணிகள் மரணம்

Subscribe to Oneindia Tamil

அராபத் குன்று (சவுதி அரேபியா):

ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்கச் சென்ற 53 இந்தியர்கள் இயற்கையான மரணம் அடைந்துள்ளனர்.

இந்தப் புனிதப் பயணத்தின் இறுதி நாள் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

காலையில் இருந்தே ஆயிரக்கணக்கான இஸ்லாமிய புனித ஹஜ் பயணிகள் அராபத் குன்றை அடைந்து வருகின்றனர். மினாவில்இருந்து நடை பயணமாகவும், வாகனங்கள் மூலமும் அவர்கள் அராபத் மலைப் பகுதியை அடைந்து வருகின்றனர்.

இந்த மலைப் பகுதியில் உள்ள ஜபல் அல்-ரஹ்மா என்ற இடத்தில் தான் 14 நூற்றாண்டுகளுக்கு முன் முகமது நபி தனது இறுதிபோதனையை வழங்கினார். இந்த இடத்தை அடைந்தவுடன் பல புனித பயணிகளும் கண்ணீர் விட்டு அழுதனர்.

மாலையில் சூரிய அஸ்தானமானத்துக்குப் பின் இந்தப் பயணிகள் மலையை விட்டு இறங்கி முஸ்தலிபா என்ற இடத்துக்குச்செல்வர். அங்கு சிறிய கூழாங்கற்களை இந்தப் பயணகள் சேகரிப்பர்.

திங்கள்கிழமை நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஜமாரத் என்ற அரக்கனை நோக்கி இந்த கற்களை புனிதப் பயணிகள் வீசுவர்.

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு விபத்துகளை சந்தித்துள்ள ஹஜ் யாத்திரை இந்த ஆண்டு எந்த அசம்பாவித சம்பவமும் இன்றுஅமைதியாக நடந்து வருகிறது. ராணுவ ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

கடும் வெப்பம் நிலவினாலும் அதை புனித யாத்ரீகர்கள் பொருட்படுத்தாமல் தங்கள் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்தஆண்டு சுமார் 160 நாடுகளில் இருந்து 13.6 லட்சம் முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரையில் ஈடுபட்டுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட96,000 அதிகமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+