பார்சலில் வந்த அழுகிய கைகள்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை எதிர்க் கட்சி எம்.பியின் தாய் மற்றும் மாமியாரின் வீடுகளுக்கு அழுகிப் போன மனித உடல்களின் உறுப்புக்களையாரோ பார்சல்களில் அனுப்பி வைத்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி. ரவி கருணநாயகே. கடந்த வெள்ளிக்கிழமை இவரது தாய் மற்றும் மாமியார் வீடுகளுக்குபார்சல்கள் வந்தன. அதில் துண்டிக்கப்பட்ட மனிதக் கைகள் இருந்தன. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அந்தக் குடும்பத்தினர்ரவிக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவருடன் தீவிர அரசியல் மோதலில் ஈடுபட்டுள்ள ரவி, அவர் தான் இந்த பார்சல்களைஅனுப்பியிருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அந்தக் கைகள் எந்த உடலைச் சேர்ந்தவை என்பதை அறிவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications