அன்பு தான் சிவம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

எந்தத் தொழிலாக இருந்தாலும், அன்பு இல்லாவிட்டால், அது சிறப்புடையதாகஇருக்காது என தமிழ் அறிஞர் அ.ச ஞானசம்பந்தம் கூறியுள்ளார்.

கோவையில் டெக்சிட்டி ரோட்டரி கிளப்பும், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்சும் இணைந்து""துறைமாண்புச் செம்மல் என்ற பட்டத்தை தொழிலதிபர் எம். கிருஷ்ணனுக்குஅளித்தது. இதற்கான பாராட்டு விழாவில், அ.ச.ஞானசம்பந்தம் பேசியதாவது:

பெரிய புராணத்தில் கூறப்பட்டிருக்கும் 63 நாயன்மார்களில் 43 பேர் அடியார்க்குஉணவளித்து பெருமை பெற்றவர்கள். இதனால் அவர்களுக்கு மோட்சம் கிடைத்தது.

ஒருவருக்கு உள்ளபடியே விருந்தளிப்பது விருந்தாகாது. தெரிந்தவர்களுக்கும்விருந்தளிப்பதை விருந்து எனக் கூற முடியாது. முன் பின் அடையாளம்தெரியாதவருக்கு விருந்து அளிப்பதே உண்மையான விருந்தோம்பல்.

இந்த விருந்தோம்பலில் சிறந்து விளங்கியவர் இளையன்குடி நாயனார். தெருவில்எதிரே வருபவர் யார் என்று தெரியாமல் கூட அவரை அழைத்து வீட்டில் விருந்துண்ணசெய்த பெருமை இளையன்குடி நாயனாருக்கு உண்டு.

அடையாளம் தெரியாதவரை அடியார் எனக் கருதி உணவளித்தவர் இவர். சமணராஅல்லது முஸ்லிமா எனத் தெரியாமல் உணவளித்தது அவருடைய அன்பு.

மைசூர் பாகு என்பதை அனைவராலும் செய்ய முடியும். கடலைமாவு, நெய், சக்கரைஇருந்தால் போதும். ஆனால் சிறப்பாக செய்ய வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்? எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் சிறப்பாக இருக்க வேண்டும்என்ற அன்பு அதில் கலந்திருக்க வேண்டும்.

அன்பு என்ற மூலப் பொருள் கிருஷ்ணா ஸ்வீட்சின் மைசூர் பாகில் கலந்திருக்கிறது.எனவே சிறப்பான மைசூர் பாகு என அது பெயர் பெற்றது. இதனால் பெரும் பணம்கிடைக்கலாம், அது பெரிய விஷயம் இல்லை.

பிட்டுக்கு ஏன் இறைவன் மண் சுமந்தான்? வந்தி என்ற முதிய பெண்மணியின்அன்பைப் பெறுவதற்காகவேதான். எந்த தொழிலாளாக இருந்தாலும், அன்புஇல்லாவிட்டால் அது சிறப்படையாது. இப்படிச் செய்யும்போது கிடைக்கும் பொருள்ஒரு பெரிய விஷயம் அல்ல என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+