தடையை நீக்கும் முயற்சியில் எல்.டி.டி.ஈ. தீவிரம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

பிரிட்டன் அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் அந்தத் தடையைநீக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.

புதன்கிழமை 13 மத்திய கிழக்கு அமைப்புகள், இரண்டு சீக்கிய அமைப்புகள் உட்படபல தீவிரவாத அமைப்புகள் பிரிட்டனில் தடை செய்யப்படுதாக பிரிட்டன் அரசுஅறிவித்தது. இதில் லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும்விடுதலைப் புலிகள் இயக்கமும் தடை செய்யப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பு பிரிட்டனில் தடை செய்யப்பட வேண்டும் என பலகாலமாக இலங்கை அரசு கோரி வந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தங்கள் மீது விதித்துள்ள தடையை நீக்குவதற்கான வழி முறைகள்குறித்து விடுதலைப் புலிகள் ஆலோசித்து வருகின்றனர். தடையை நீக்கும்முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பிரிட்டனில் இருக்கும் முன்னணி வழக்கறிஞர்களைசந்தித்து தங்கள் மீது பிரிட்டன் அரசு விதித்துள்ள தடையை நீக்கும் வழியுள்ளதாஎன்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

விடுதலைப் புலிகள் மனித உரிமை குழுவினருடனும் ஆலோசனை நடத்திவருகிறார்கள் என பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனின் இந்த நடவடிக்கை ஆங்கிலேயர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையேஇருந்து வந்த நட்புறவை பாதித்துள்ளது. இது வருந்ததத்தக்கது என விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து பிரிட்டனின் உள்துறைசெயலாளர் ஜாக் ஸ்டிரா கூறுகையில், பிரிட்டன் அரசு தீவிரவாத எதிர்ப்புநடவடிக்கையில் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதை அரசின் இந்தநடவடிக்கை காட்டுகிறது என்றார்.

பிரிட்டன் அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் தீவிரவாத அமைப்புகளின் பட்டியல்பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். பிரிட்டன் பிரதமர் டோனிபிளேரின் தொழிலாலளர் கட்சிக்கு கீழ் சபையில் அதிகமான உறுப்பினர்கள்இருப்பதால் இந்த பட்டியல் பெரும்பான்மையான அங்கீகாரம் பெற்றுவிடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கை இனப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில்ஈடுபட்டுள் நார்வே தூதுக்குழுவினர் மீண்டும் இலங்கைக்கு வந்து அமைதி பேச்சுவார்த்தை குறித்து அரசுடன் பேசசு வார்த்தையில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் கூறுகையில், பேச்சுவார்த்தைநடத்துவது குறித்து நார்வே தூதுக்குழுவிடம் சில முக்கிய நிபந்தனைகள்விதிக்கப்படும். ஆனாலும் அமைதியை நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+