நார்வே அமைதித் தூதர் இலங்கை வந்தார்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிரிட்டன் தடை செய்துள்ள நிலையில் புலிகள்-இலங்கை அரசு இடையே பேச்சுவார்த்தைக்குவழி வகுக்க முயன்று வரும் நார்வே நாட்டின் முயற்சிகளும் பின்னடைந்துள்ளன.

இந் நிலையில் நார்வே நாட்டு அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொழும்பு வந்துள்ளார். அவர்இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, எதிர்க் கட்சியினரை சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது.

தங்களை தீவிரவாத இயக்கமாக அறிவித்தால், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகி விடுவோம் என புலிகள்திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். இந் நிலையில் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் நார்வே ஈடுபடும் எனத் தெரிகிறது.நார்வேயின் அமைதி முயற்சிகளுக்கு புலிகள தரப்பிலிருந்து முழு ஆதரவு கிடைக்கும் என அந்த இக்கத்தின் அரசியல் பிரிவுத்தலைவர் ஆண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.

பிரிட்டனின் அறிவிப்பால் அமைதி பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக வேண்டாம் என இலங்கை அரசும் புலிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இங்கிலாந்து விதித்துள்ள தடை சட்டமாக்கப்பட்டால், புலிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்படும். புலிகளின் போர்செலவுகளுக்கு நிதி திரட்டப்படும் முக்கிய நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அது தவிர அங்கு தான் புலிகளின் தலைமைஅலுவலகமும் அமைந்துள்ளது.

நார்வே தூதர் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாரகனை 4 மாதங்களுக்கு முன் சந்தித்துப் பேசினார். இதையடுத்து புலிகள் போர்நிறுத்தத்தையும் அறிவித்தனர். அதை மார்ச் 24ம் தேதி வரையும் நீட்டித்துள்ளனர்.

1983ம் ஆண்டிலிருந்து நடந்து வரும் போரில் இதுவரை சுமார் 64,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+