குஜராத், அஸ்ஸாமில் மீண்டும் நில நடுக்கம்
அகமதாபாத் மற்றும் ஷில்லாங்:
குஜராத்தில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. அதே போல அஸ்ஸாம் உள்ளிட்ட இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைமீண்டும் லேசான நில நடுக்கம் தாக்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணிக்கு குஜராத்தில் 5.0 அளவு நில நடுக்கம் தாக்கியது. அகமதாபாத் மற்றும் அதன் புற நகர்களில்இந்த நில நடுக்கத்தை உணர முடிந்தது. வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
கடந்த ஜனவரி 26ம் தேதி மிகக் கடுமையான பூகம்பம் தாக்கிய பகுதிகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்ஸாம்-மிசோரம்:
அஸ்ஸாம், மிசோரம் பகுதியில் அதிகாலை 4.26 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. அஸ்ஸாமின் சில பகுதிகள், ஷில்லாங்உள்ளிட்ட மிசோரம் மாநிலத்தின் பல பகுதிகள், மியான்மாரை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் இந்த நில நடுக்கத்தை உணரமுடிந்தது.
5 நாட்களுக்கு முன்பு தான் இந்தப் பகுதியை நில நடுக்கம் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவுக்குப் பதிவானது. நில நடுக்கத்தின் மையம்இந்திய-மியான்மார் எல்லையில் இருந்தது.
ஆனால், இதனால் உயிர்ச் சேதமோ, சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
ஷில்லாங்கில் விட்டுவிட்டு இரு முறை நில நடுக்கம் ஏற்பட்டவுடன் தூக்கத்தில் இருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேஓடினர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 5 முறை இந்தப் பகுதியில் நில நடுக்கம் தாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications