உயிரைப் பறித்த துப்பாக்கி விளையாட்டு
சான்ட்டி (கலிபோர்னியா):
கலிபோர்னியாவில் உள்ள சான்ட்டியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 15 வயது மாணவர் சிரித்த முகத்துடன் தனது நண்பர்களைநோக்கி விளையாட்டாகத் துப்பாக்கியால் சுட்டார்.
இந்த மாணவரின் துப்பாக்கி விளையாட்டில் இரண்டு மாணவர்களின் உயர் பறிக்கப்பட்டது. 13 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் உள்ள உயர் நிலைப்பள்ளிகளில் துப்பாக்கி வைத்திருப்பது ஹீரோத்தனமான பேஷனாக மாறி வருவதுதான் வேதனைக்குரியது. ஏப்ரல்மாதம் 1999 ம் ஆண்டு கொலராடோவில் உள்ள கொலம்பைன் உயர்நிலைப்பள்ளியில் உல்ள இரண்டு டீன் ஏஜ் மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது 15 வயது மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சான்ட்டி மேயர் ரான்ட்டே வோபெல் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் சான்ட்டியில் 9 வாரங்களாக மேயராக இருந்து வருகிறேன். ஆனால் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு நடத்தும் மாணவர்களைக் கண்டிக்க வேண்டும்.முதலில் மாணவர்கள் துப்பாக்கி உபயோகப்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும். நாங்கள் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தத்திட்டமிட்டுள்ளோம்.
சான் டைகோவில் உள்ள சான்ட்டியில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு போல் அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள்நடக்கலாம். இது கண்டிக்கத்தக்கது.
கடந்த சில வருடங்களாக அர்கென்சாஸ், ஒரேகான், கென்டக்கி மற்றும் கொலராடோவில் தொடர்ந்து இதுபோன்ற துப்பாக்கியால் சக மாணவர்களைச்சுடும் மாணவர்கள் பெருகி வருகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications