மூப்பனார் எங்கே போவார் ...குண்டு வீசுகிறார் சண்முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மூப்பனார் 3-வது அணிக்குத் தலைமை தாங்கப்போவது 100 சதவீதம் உறுதியாகி விட்டது என்று புதிய நீதிக் கட்சித் தலைவர்ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார். இதன் மூலம் தமிழக அரசியலில் மேலும் குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

மூப்பனார் குழப்பம் பெரும் குழப்பமாக இருக்கிறது. தினசரி ஒரு செய்தி அவரை மையமாக வைத்து வந்து கொண்டேயுள்ளன.எந்தக் கூட்டணியில் அவர் இருக்கப் போகிறார், என்ன செய்யப் போகிறார் என்பது அவரைத் தவிர வேறு யாருக்குமேதெளிவாகத் தெரியவில்லை.

அதிமுக கூட்டணியில் அவர் நீடிப்பது குறித்து இன்னும் முழுமையாகத் தெரியாத நிலையில், அவர் 3-வது அணிக்குத் தலைமைதாங்கப் போவது 100 சதவீதம் உறுதி என்று புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்.சமீபத்தில் முளைத்த ஜாதிக் கட்சிகளில் கொஞ்சம் ஆக்டிவாக உள்ள கட்சி என்ற வகையில் இந்தக் கட்சித் தலைவர் கூறுவதுமுக்கியத்துவம் பெறுகிறது.

மூப்பனாரை தொடர்ந்து ஏ.சி.சண்முகம் சந்தித்து வருகிறார். புதன்கிழமையும் அவரது ஆழ்வார்ப் பேட்டை இல்லத்தில் சண்முகம்சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் வரை பேசினார். அவருடன் கட்சிப் பொதுச் செயலாளர் ஐசரி கணேஷ் உள்பட நிர்வாகிகளும்சென்றிருந்தனர்.

மூப்பனாருடன் ஆலோசனை நடத்தி விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மூப்பனார் அழைப்பின்பேரிலேயே அவரைச் சந்திக்க வந்தேன். 3-வது அணிக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினேன். தொகுதிநிலவரம் குறித்துக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். எல்லாவற்றையும் விளக்கினேன். பொறுமையாகக் கேட்டுக் கொண்டார்.

3-வது அணிக்கு மூப்பனார் தலைமை தாங்கப் போவது 100 சதவீதம் உறுதி. இதில் சந்தேகமேயில்லை.

த.மா.கா. இல்லாமல் அதிமுகவால் வெற்றி பெற முடியாது. எனவே தான் ஜெயலலிதா தொகுதி விஷயத்தில் இறங்கிக் கொண்டேவந்து இப்போது 45 தொகுதிகள் என்ற அளவிற்கு வந்துள்ளார்.

தமிழக நலன் கருதி விரைவில் மூப்பனார் தனது முடிவை அறிவிப்பார் என்றார் சண்முகம்.

சண்முகத்தின் புதிய கருத்தால் அரசியல் நெருக்கடி மேலும் சிக்கலடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+