இந்திய மாணவிக்கு அமெரிக்க விருது

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

அமெரிக்காவின் கல்லூரி மாணவர்களுக்கான விருதிற்கு, அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவி ஒருவர்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பென்ஸில்வேனியாவின் ட்யூக் பல்கலைக்கழகத்தில் பயிலும் பூஜா குமார் என்ற அந்த மாணவியின் புத்திக்கூர்மைமற்றும் மற்றவர்களின் துயர்நீக்க உதவும் அவரின் சேவை மனப்பான்மை ஆகியவற்றிற்காக அனைத்து அமெரிக்ககல்லூரி கல்விக்குழு கெளரவ விருது பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 முறை இத்தகைய விருதுகள் வழங்கி கெளரவிக்கும்அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான யு.எஸ்.ஏ.டுடே, இவ்விருதிற்கு தேர்ந்தெடுத்துள்ள 20 பேரில் பூஜாமட்டுமே தெற்காசியாவைச் சேர்ந்தவர்.

கிழக்கு தைமூரில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக மருத்துவ முகாம் ஒன்றை ஆரம்பித்த பூஜா,ருவாண்டா கலவரத்தின் போது ஜைரே நாட்டிற்கு வந்த ருவாண்டா அகதிகளிடம் பரவிய காலரா நோயைகுணப்படுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டார்.

படிப்பிலும் சிறந்து விளங்கும் பூஜா, ட்யூக் பல்கலைகழகத்தின், பெருமைமிகு ஏஞ்சியர் பி.ட்யூக் மெமோரியல்ஸ்காலர்ஷிப் பெற்றுள்ளதோடு, மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு அரசாங்க குழுக்களிலும் இடம் பெற்றுள்ளார்.

விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சரியமாக உள்ளதோடு, என்னை பெருமைப்படுத்தியுள்ளது. பெற்றோர்,உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தூண்டுதலின் பேரிலேயே மருத்து சேவையில் ஈடுபட்டதாக பூஜா கூறுகிறார்.

இந்தியாவில் பிறந்தாலும், தனியார் நிறுவன அதிகாரியான அவரது தந்தையின் வேலை காரணமாக சிங்கப்பூர்,இந்தோனேஷியா, மற்றும் கனடா போன்ற பல்வேறு நாடுகளில் கல்வி பயின்றுள்ளார் பூஜா.

1996 ல் மறைந்த அன்னை தெரஸாவுடன் கோல்கத்தாவில் உள்ள பிரேம் டான் ஹோம் மருத்துவமனையில்இறக்கும் தருவாயில் இருந்த பல நோயாளிகளுக்கு சேவை செய்துள்ளார்.

சேவை மனப்பான்மையும், அறிவுத்திறனும் ஒரு சேர இருப்பது அபூர்வமானது என இவரை இவ்விருதுக்குபரிந்துரைத்த உயிரியல் துறை பேராசிரியர் டேவிட் மெக்கிலே தெரிவித்துள்ளார்.

தனது பிற்காலத்தில் மருத்துவராக விரும்பும் பூஜா பல்வேறு விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+