அசார் வழக்கு : மார்ச் 20 க்கு ஒத்திவைப்பு
ஹைதராபாத்:
கிரிக்கெட் விளையாட தனக்கு ஆயுட்கால தடை விதித்த இந்திய கிரிக்கெட் வாரியம் மீது அசாருதீன் தொடர்ந்த வழக்கின் விசாரணை மார்ச் 20 ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் நகர இரண்டாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கின் விசாரணையின் போது, அஸாருதீனுக்கு ஆயுட்கால தடை விதிக்கும்வாரியத்தின் தீர்மானத்தின் நகலுடன், கிரிக்கெட் ஊழல் குறித்து விசாரிக்க முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் மாதவனை நியமிக்கும் வாரியத்தின் தீர்மானத்தின்நகலும் தேவை என நீதிமன்றத்தில் அஸாருதீன் வக்கீல் மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து விசாரணையை மார்ச் 20 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி சியாமா சுந்தர ராவ். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வாரியம்அஸாருதீனின் குற்றச்சாட்டிற்கு பிப்ரவரி 16ல் பதிலளித்தது. அதன் தலைவர் ஏ.சி.முத்தையாவும், விசாரணை அதிகாரி மாதவனும் பிப்ரவரி 26ம் தேதியும்பதில் மனு தாக்கல் செய்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications