புத்தர் சிலை உடைப்பு: பூட்டான் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாடு முழுவதிலுமுள்ள புத்தர் சிலைகளை உடைப்பதற்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் தீவிரவாதிகள் உத்தரவிட்டதற்கு பூட்டான் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலும், சீனாவின் எல்லைப்பகுதிக்கும் இடையே உள்ளது பூட்டான். புத்தர் சிலைகள் உடைக்கப்படுவதற்கு தலிபான் அரசுஉத்தரவிட்டது குறித்து பூட்டான் தூதரகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாமியான் உள்பட பல இடங்களில் உள்ள புத்தர் சிலைகளை உடைப்பதற்கு தலிபான் தீவிரவாதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கு பூட்டான் அரசு சார்பிலும்,மக்கள் சார்பிலும் ஆழ்ந்த வருத்தத்தை பூட்டான் தெரிவித்துக் கொள்கிறது.

பாமியானில் உள்ள புத்தர் சிலைகள் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அது 50 மீட்டர் உயரமும், 34.5 மீட்டர் நீளமும் உடையது. இந்த சிலைகளைஉடைக்க தலிபான் உத்தரவிட்டிருப்பது இஸ்லாமிய சட்டத்தையே மீறுவது போன்ற கீழ்த்தரமான செயலாகும்.

இந்தச் செயல் தேசிய ஒருமைப்பாட்டையே சீர்குலைக்கும் முயற்சியாகும். இது உலகம் முழுவதிலுமுள்ள புத்த மத மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல.அவர்களின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயலாகும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது பூட்டான்.

முன்னதாக, இந்தியா, ஈரான், கிரீக் மற்றும் பல நாடுகள் புத்தர் சிலைகள் உடைக்க உத்தரவிட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+