வானில் பிறந்த குழந்தை
கோல்கத்தா:
நடுவானில் பறக்கும் விமானத்தில் குழந்தையை பெற்றெடுத்தது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் அனுபவத்தை போன்றது என்கிறார் குர்மீத் கவுர் என்றபஞ்சாபிப் பெண்.
சிங்கப்பூரில் உள்ள தனது தாய் வீட்டிலிருந்து ஹோசியாபூர் வருவதற்காக சிங்கப்பூர்-மாஸ்கோ விமானம் மூலம் டெல்லிக்கு கிளம்பிய குர்மீத் கவுருக்குஏப்ரல் முதல் வாரம் தான் குழந்தை பிறக்கும் என டாக்டர் கூறியிருந்தார்.
ஆனால், டெல்லி வரும் வழியில் விமானத்திலேயே அவருக்கு குழந்தை பிறந்ததால், கொல்கத்தா விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுகவுரும், அவருடைய குழந்தையும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
திங்களன்று நடுவானில் பிறந்த, கிரண் பிரீத் என பெயரிடப்பட்டுள்ள அப்பெண் குழந்தை விமானத்தில் பிறந்ததற்கான சான்று ஒன்றை அவ்விமானபைலட் தந்த பின் தான் அவர் எந்த நாட்டு பிரஜை என தெரியும். இருந்தாலும் அக்குழந்தை இந்திய பிரஜையாக இருப்பதே தான் விரும்புவதாக அதன்தாய் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications