ஜெ. முடிவை நிராகரித்தது காங்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாண்டிச்சேரியில் இரண்டரை ஆண்டுகள் காங்கிரஸ், இரண்டரை ஆண்டுகள் பாமக என்ற ஜெயலலிதாவின் முடிவை காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாகநிராகரித்துள்ளது காங்கிரஸ்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் குலாம் நபி ஆசாத் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றதுதான் அடிப்படை பிரச்சனை. ஜெயலலிதாவின் புதிய யோசனைக்கு காங்கிரஸ் ஒரு போதும் சம்மதிக்காது.பாண்டிச்சேரியைப் பொறுத்தவரை பாமக அரசில் காங்கிரஸ் ஒரு போதும் அங்கம் வகிக்க முடியாது. அதிமுக தான் இடம்பெற முடியும்.

பாண்டிச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது.தொகுதி எண்ணிக்கையை வேண்டுமானால்சமரசம் செய்து கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைமை அந்தஸ்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது.

தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் தமாகாவும், காங்கிரசும் இணைந்தே செயல்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் தமாகாமற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு 45 இடங்களை ஒதுக்குவதாக ஜெயலலிதா கூறியிருப்பதற்கு மூப்பனார்தான் பதில் கூற வேண்டும்.

3 வது அணி அமைப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை. அதற்கான நெருக்கடி வந்து கொண்டிருக்கிறது என்றார் குலாம் நபி ஆசாத்.

முன்னதாக, குலாம் நபி ஆசாத், தொலை பேசி மூலம் மூப்பனாரைத் தொடர்பு கொண்டு இரண்டு முறை பேசினார். பின்னர் சோனியா காந்தியை நேரில்சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+