பெண் குழந்தைகள் கல்விக்கு புதிய திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பெண் குழந்தைகள் மற்றும் ஏழைக் குழந்தைகள் குறைந்தது எட்டாவது வரையிலான அடிப்படை கல்வியினை பெறுவதற்கு தேவையான திட்டங்களைமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தயாரித்து வருகிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வட்டாரங்கள் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில் இதனை தெரிவித்துள்ளனர். மேலும்,

இந்தாண்டு பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி நாராயணன், தனது உரையில் குறிப்பிட்டிருந்த தேசிய ஒருங்கிணைந்த கல்வித்திட்டமான, சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் பெண் குழந்தைகள் மற்றும் ஏழைக் குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை கல்வி கிடைக்காத குழந்தைகள் கல்வி பெறுவதற்கான திட்டத்தில், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கண்டறிந்து அதனைகளைவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

அனைவருக்கும் சமமான கல்வி என்ற திட்டத்தை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்காக மாவட்ட வாரியாக திட்டங்கள் வகுக்கப்படும். இதனால்,இத்திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவைப்படும் உதவிகள் தனியாக கண்டறியப்பட்டு அளிக்க வசதி காணப்படும் எனஅவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+