குஜராத்துக்காக அசார் நடத்தும் பேஷன் ஷோ
ஹைதராபாத்:
கிரிக்கெட் ஊழலில் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ பேஷன் ஷோநடத்துகிறார்.
ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தனது மனைவியுடன் இணைந்து அசார் துவக்கியுள்ள அஸார்-சங்கீதா மேனேஜ்மென்ட் சர்வீஸஸ் நிறுவனம் நடத்தும் இந்த நிகழ்ச்சி ஹைதராபாத் நகரில் உள்ளஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மார்ச் 11ம் தேதி நடைபெறுகிறது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வென்டெல் ராட்ரிக்ஸ், கீதாஞ்சலி காஷ்யப், மணீஷ் மல்ஹோத்ரா, மது சாப்ரே, ஜான் ஆபிரஹாம் போன்ற மாடல்கள் மற்றும்டிஸைனர்களுடன் பூஜா பத்ரா, திவ்யா மிர்ஸா போன்ற அழகிகளும் பங்கேற்க உள்ளதாக அசார் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications