இலங்கைக்கு அமெரிக்கா மருத்துவ உதவி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு அமெரிக்கா 5 லட்சம் டாலர்கள் பெறுமானமுள்ள மருத்துவ உபகரணங்களை செவ்வாய்க்கிழமைவழங்கியது.

இலங்கைக்கான அமெரிக்கக் தூதர் ஆஷ்லே வில்ஸ் இந்த மருத்துவ உபகரணங்களை யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு வழங்கினார்.

இதுகுறித்து ஆஷ்லே வில்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மனிதநேய அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் உள்ல மருத்துவமனைக்கு அமெரிக்கா மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது.

இதில் பற்களைப் பரிசோதித்துத் பார்ப்பது தொடர்பான உபகரணங்கள், மாரடைப்பு நோயைப் பரிசோதித்துப் பார்க்கும் கருவிகள் மற்றும் பல தொழில்நுட்பஉபகரணங்கள் அடங்கும்.

அமெரிக்கா சார்பில் இந்த உதவியைச் செய்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் மருத்துவமனைகள் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதுகுறித்து அமெரிக்க டாக்டர்களை இலங்கைக்கு அனுப்பி பயிற்சியளிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு வில்ஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

முன்னதாக, யாழ்ப்பாணத்திற்கு இந்தியத் தூதர் கோபால கிருஷ்ண காந்தி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+