அதிமுக கூட்டணி: இடதுசாரி கட்சிகள் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்து இந்திய மார்ஸ்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ் கட்சியினர் அதிருப்திஅடைந்துள்ளனர்.

இது குறித்து விவாதிக்க மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

இது குறித்து அக்கட்சியினர் தெரிவிக்கையில், இந்த கூட்டம் புதன்கிழமை தொடர்ந்து நடைபெறும். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து இறுதி முடிவுமார்ச் மாதம் 8-ம் தேதி நடைபெறும் கட்சியின் மாநில குழு கூட்டத்தின் போது எடுக்கப்படும்.

எங்களுக்கு 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் வரைமுறையின்படி குறைந்தபட்சமாக 16 தொகுதிகளாவது எங்களுக்கு ஒதுக்கப்படவேண்டும். இது எங்களுக்கு கெளரவ பிரச்சனை. 16 தொகுதிகளுக்கு குறைவாக தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்.

ஜெயலலிதாவுடன் நடத்தப்பட்ட முதல் கட்ட பேச்சுவார்த்தை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. ஜெயலலிதா அழைப்பு விடுத்தபின் எங்கள் கட்சியின் தேர்தல்பணி குழுவினர் மீண்டும் அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என்றனர்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு கூறுகையில், எங்களுக்கு ஜெயலலிதாவால் 6 தொகுதிகள் மட்டுமேஒதுக்கப்பட்டுள்ளது. அது எங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது குறைந்தபட்சமாக எங்களுக்கு 15 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும் எனவலியுறுத்துவோம்.

நாங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் இரண்டு நாட்களில்கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+