வெளிநாட்டு சிறைகளில் 2078 இந்தியர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 2078 க்கும் மேற்பட்ட இந்தியக் கைதிகள் மூன்று ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டு விடுதலைக்காகக்காத்திருக்கிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அஜித் பாஞ்சா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அஜித் பாஞ்சா எழுத்து மூலம் அளித்த விவரம்:

மலேசியாவில் உள்ள சிறைகளில் 1,800 இந்தியக் கைதிகள் உள்ளனர். மேலும் வங்கதேச சிறைகளில் 132 இந்தியர்களும், ஐக்கிய அரபு நாடுகளில் 120இந்தியர்களும் உள்ளனர்.

அவர்களது தண்டனை முடிந்தபிறகும் அவர்கள் விடுதலை தாமதப்படுவதற்கான காரணம் எதுவென்று இதுவரைத் தெரியவில்லை.அவர்களதுவிடுதலைக்காக மத்திய அரசு முயன்று வருகிறது.

அவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர்கள் இந்தியா வருவதற்கான தஸ்தாவேஜூகள், நண்பர்கள் அல்லது குடும்பங்கள் மூலமாக அவர்கள்வருவதற்கான விமானச்சீட்டு ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் 7 இந்தியக் குழந்தைகள் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். இந்தக் குழந்தைகள் 7 பேரும் விரைவில் விடுதலையடைவதற்கு பாகிஸ்தான்அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 4 குழந்தைகள் உள்பட 84 இந்திய மீனவர்களை விரைவில் விடுவிப்பதாக பாகிஸ்தான்அறிவித்துள்ளது. அவர்களை விடுவிக்க மத்திய அரசும் முயற்சித்து வருகிறது.

மேலும் பாகிஸ்தான் உள்பட வெளிநாடுகளில் வேலை செய்து வரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு வருவது குறித்து இதுவரை6891 புகார்கள் வந்துள்ளன. இது குறித்தும் மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என்றார் அஜித் பாஞ்சா.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+