மாணவர்களை அடித்த அர்ஜூன ரணதுங்கா கைது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

கிரிக்கெட் விளையாடிய மாணவர்களை அடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜூனரணதுங்க கைது செய்யப்பட்டார்.

மார்ச் 2ம் தேதி தனது வீட்டிற்குள் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க வந்த பள்ளி மாணவர்களை அடித்ததாகஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அர்ஜூன ரணதுங்கா மற்றும் அவரது சகோதரர் பிரசன்னாமீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக போலீஸார் ரணதுங்காவையும் அவரதுசகோதரரையும் தேடி வந்தனர்.

இதனிடையே, குஜராத் நிவாரண நிதி திரட்டும் காட்சி போட்டி ஒன்றில் கலந்து கொள்ள கென்யா சென்றிருந்தரணதுங்க, இலங்கை திரும்பியதும் தனது வக்கீல் மூலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் மாஜிஸ்டிரேட்முன் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.

அவருடைய சகோதரரான பிரசன்னாவை தனியார் மருத்துவமனை ஒன்றில் இருக்கும் போது போலீஸார் கைதுசெய்தனர். மாஜிஸ்டிரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட அவரை மார்ச் 14ம்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டநீதிபதி, அவரை மருத்துவமனையில் தொடர்ந்து தங்க அனுமதித்தார்.

இவ்வழக்கில் விரைவான நடவடிக்கை வேண்டும் என பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் சார்பில் பல்வேறுபள்ளிகளின் மாணவர்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

ரணதுங்காவின் தந்தையான இலங்கை உணவுத்துறை மந்திரி ரிக்கி ரணதுங்கா, பள்ளி மாணவர்கள் அத்துமீறிதங்கள் வீட்டில் நுழைந்ததோடு தனது மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை தரக்குறைவாக பேசியதாககுற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வழக்கில் பாரபட்சமற்ற வகையில் விசாரணை நடைபெற வேண்டும் என ரிக்கி ரணதுங்கா கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+