மிர் விண்கலத்தால் ஆபத்து
மாஸ்கோ:
ரஷ்யாவின் மிர் விண்கலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்களுக்குள்ளான காளான்கள் பூமியை அடைவதால் ஏற்படும் விளைவுகள்பயங்கரமானதாக இருக்கும் என்கிறார் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவர்.
இவ்விளைவுகள் மிர் விண்கலம் பூமியை தாக்குவதால் ஏற்படும் விளைவுகளை விட அதிகம் என்கிறார் ரஷியாவின் யூரி கராஸ் என்ற விண்வெளிஆராய்ச்சியாளர்.
ரஷிய விண்வெளித்துறையில் விண்கல ஆலோசகராக உள்ள அவர், தனது இந்த கருத்து அந்நாட்டு மருத்துவ மற்றும் உயிரியல் ஆய்வு நிறுவனம் ஒன்றின்ஆராய்ச்சி முடிவுகளை அடிப்படையாக கொண்டது என்கிறார்.
13 ஆண்டுகளுக்கு முன்பே ரஷிய விஞ்ஞானி ஒருவர் மிர் விண்கலத்திலிருந்து எடுக்கப்பட்ட இத்தகைய காளான்கள், மெட்டல், பிளாஸ்டிக் போன்றவற்றைதாக்கி அளிக்கக்கூடிய காளான் வகைகளுடன் சேர்ந்து புதிய வகை காளான்கள் உருவானால் ஆபத்து அதிகம் என தெரிவித்திருந்தார்.
எனவே, விண்கலத்தில் உள்ள காளான் போன்ற நுண்ணுயிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவது ஆபத்து என அறிஞர்கள் கூறியதை ரஷிய விண்வெளிஅதிகாரிகள் மறுத்து வந்தனர்.
அசிட்டிக் அமிலம் போன்ற தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்களை வெளியிடக்கூடிய இத்தகைய காளான்கள் மிர் விண்கலத்தில் இருப்பதை அங்கு சென்றுவந்தஅமெரிக்க விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அவை மீண்டும் பூமியை அடைந்தால் பாதிப்பு அதிகம் என அறிஞர்கள் அஞ்சுகின்றனர்.












Click it and Unblock the Notifications