கனடாவில் இலங்கைத் தமிழர் மீது துப்பாக்கிச்சூடு

Subscribe to Oneindia Tamil

டொரான்டோ:

கனடா தலைநகர் டொரான்டோவில் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் அவர்படுகாயமடைந்தார்.

தெற்காசியாவைச் சேர்ந்த இன்னொருவர், வன்முறைக் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

அடையாளம் தெரியாத கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்தவர் பஞ்சலிங்க நாகலிங்கம். வயது 28. இவர் மார்ச் 4 ம் தேதிடொரான்டோவில் மிமிக்கோ சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்த போது அவர் மேல் வன்முறைக் கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டதில் அவருக்குபலத்த காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்திற்கு முன்தினம் தெற்காசியாவைச் சேர்ந்த 23 வயது சாஹிர் லால்ஜி என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

நாகலிங்கத்தை துப்பாக்கியால் சுட்டவரும் இலங்கையைச் சேர்ந்தவர் அல்லது தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இவர் பல குற்றங்கள் புரிந்தது தொடர்பாக டொரான்டோ சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். டொரான்டோவில் சிறைக்கைதிகள் வாரஇறுதியில் சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் வெளியே சென்று வரலாம்.

அதே போல் இவர் சிறையிலிருந்து வெளியே வந்த போது, துப்பாக்கி வைத்திருந்த ஒரு கும்பல் சிறை வாசலில் காத்திருந்து விடுவிக்கப்பட்டவர்களைநோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் நாகலிங்கம் படுகாயமடைந்தார். அவருக்கு மார்பிலும், கையிலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது முன்பகை காரணமாக இந்தச்சண்டை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் மேல் சராமரியாகத் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தும் இவர் உயிர் பிழைத்து விட்டார் என்பதுஆச்சரியப்பட வைக்கும் விஷயமாகும்.

இதுகுறித்து போலீஸ்காரர் ஜோன் வாக்கர் கூறுகையில், தற்போது இங்குள்ள தமிழர்கள் தங்களுக்குள் முன்விரோதம் காரணமாக அடிதடியில் இறங்குவதுதொடர்ந்து நடந்து வருகிறது. இருப்பினும் நாகலிங்கம் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகாமல் இருந்தது அதிர்ஷ்டவசமானது என்றார்.

கடந்த வாரம் மட்டும் டொரான்டோவில் மூன்று கொலைகள், மூன்று கொலை முயற்சிகள், மூன்று தாக்குதல்கள், மூன்று துப்பாக்கிச் சூடுசம்பவங்கள், 13 முகமூடிக் கொள்ளைச் சம்பவங்கள், 4 கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் 24 க்கும் மேற்பட்ட சிறு, சிறு குற்றங்கள் ஆகியவைநடந்தன என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+