ஸ்ரீரங்கம் கோவிலில் புதிய சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீரங்கம்:

சரித்திர புகழ் வாய்ந்த ஸ்ரீரங்கம் கோவிலில் மார்ச் மாதம் 15-ம் தேதி கும்பாபிஷேகம்நடக்கவுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள தந்திபிரச்சனையை கிளப்பியுள்ளது.

ரங்கநாதர் கோவிலின் மரபு பாதுகாப்பு குழுவின் செயலாளர் கிருஷ்ணமாச்சாரிமுதல்லவருக்கு அனுப்பியுள்ள தந்தியில், கும்பாபிஷேகத்திற்கு முன் நடந்து வரும்புணரமைப்பு பணியில் கோவிலின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாககூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், மூலவரின் சன்னிதியில் புணரமைப்பு பணி இந்தமாதம் 11-ம்தேதி துவங்கியது. சிற்ப வல்லுனர்கள் ரங்கநாதரின் மார்பிலிருந்த ஸ்ரீவஸ்த லட்சுமியின் திருவுருவத்தை எடுத்து விட்டு அங்கே முக்கோண வடிவில்எந்திரத்தை வைத்துள்ளனர்.

பஞ்சரத்ர ஆகமர் மற்றும் ஸ்ரீ பரமேஸ்வர சம்ஹிதை கோவிலில் செய்ய வேண்டியபூஜை முறைகள் பற்றி வகுத்து கூறியுள்ளார்கள். சிலப்பதிகாரம். ஸ்ரீவேதாந்த தேசிகன்,ஸ்ரீ பெரிய வச்சன்பிள்ளை, திருவாழ்மொழி, நெல்லை வன்னாஸ்ரமம் தண்டபாணிஸ்வாமி பிள்ளை மற்றும் பெருமாள் ஐயங்கார் ஆகியோர் ரங்கநாதரின் மார்பில் வஸ்தலட்சுமி இருந்தது பற்றி கூறியுள்ளனர். யாருமே லட்சுமிக்கு பதிலாக எந்திரம்இருந்ததாக கூறவில்லை.

இது குறித்து இந்து அறநிலையத்துறை கமிஷனர் சர்வார்கார் கோவிலுக்கு வந்துபார்வையிட்டுச் சென்றுள்ளார். கோவில் கமிட்டியின் இரண்டு பிரதிநிதிகளும் கூடஎந்திரங்கள் பொருத்தியிருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர் என கிருஷ்ணமாச்சாரிகூறியுள்ளார்.

கும்பாபிஷேகம் மார்ச் மாதம் 15-ம் தேதிதான் நடக்கவுள்ளது. இன்னும் நாட்கள்இருப்பதால் தற்போது நடந்துள்ள தவறை அதற்குள் சரி செய்துவிடலாம் எனகிருஷ்ணமாச்சாரி கூறுகிறார்.

அர்ச்சகர்கள் மறுப்பு:

ஆனாலும் கோவிலில் இருக்கும் மூத்த அர்ச்சகர்கள் இந்த புகார்களை மறுத்துள்ளனர்.அவர்கள் கூறுகையில், புகார் கூறுபவர்களிடம் எந்த விதமான புகைப்பட ஆதாரமோஅல்லது வீடியோ ஆதாரமோ கிடையாது.

புணரமைப்பு பணிகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ படங்களிலும் ரங்கநாதரின்மார்பில் ஸ்ரீ வஸ்த லட்சுமியின் திருவுருவம் இல்லை.

வஸ்த லட்சுமி குறித்து ஆழ்வார் பாசுரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாககூறுகிறார்கள். இவை ஆழ்வார்களின் கற்பனையில் உருவானவை என்றனர்.

கிருஷ்ணமாச்சாரியின் புகார்களை மறுத்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுக்குஅர்ச்சகர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

தற்போது இருக்கும் மூலவர் ரங்கநாதரின் திருமேனி 1959-ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்துக்கு பின் புணரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+