பஸ் கட்டணம் ரூ. 6000: மாணவர்கள் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடத்திய திடீர் போராட்டத்தில் கல்லூரியின் பல்வேறு பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.போலீஸார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீசி மாணவர்களைக் கலைத்தனர்.

சென்னை ஆவடி-அலமாதி சாலையில் உள்ளது வேல் டெக் பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியில் சமீபத்தில் கல்விக் கட்டணம் உள்பட பல கட்டணங்கள்அதிகரிக்கப்பட்டன. படிப்புக் கட்டணம் ரூ. 56,000 த்திலிருந்து ரூ. 62,840 ஆகவும், கம்ப்யூட்டர் பயிற்சிக் கட்டணம் ரூ. 6000 த்திலிருந்து ரூ. 11,000ஆகவும், பஸ் கட்டணம் ரூ. 3000 த்திலிருந்து ரூ. 6000 ஆகவும் உயர்த்தப்பட்டதாக கல்லூரி நோட்டீஸ் போர்டில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மாணவர்கள் அதிருப்தியுற்று கல்லூரி மாணவர் தலைவர் ரங்கராஜனிடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், கல்லூரி மாணவர் விடுதிக்கானதொலைபேசி வசதி, மின் சப்ளை ஆகியவை துண்டிக்கப்பட்டன.

பஸ் வசதியும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் செவ்வாய்க்கிழமை கல்லூரியில் குழுமினர். உடனடியாக பேச்சுவார்த் தைக்கு வருமாறு மாணவர்சங்கத் தலைவர் ரங்கராஜன் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் வரவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து மாணவர்கள் வன்முறையில் இறங்கினர். கல்லூரிக்குள் நு ழைந்து கண்ணில் பட்ட பொருட்களையெல்லாம் அடித்து துவம்சம் செய்தனர்.கம்ப்யூட்டர்கள், இருக்கைகள் என பல பொருட்கள் நாசமாயின.

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் ஆவடி டேங்க் பேக்டரி போலிஸில் புகார் கொடுத்தது. போலீஸார் விரைந்து வந்து மாணவர்களைக் கலைந்து போகக்கூறினர்.

ஆனால் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்தால்தான் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்று மாணவர்கள் கூறி விட்டனர். இதையடுத்துபோலீஸார் தடியடி நடத்தினர். அப்படியும் மாணவர்கள் கலையாததால், கண்ணீர்ப் புகை குண்டு வீசினர். இதில் 5 மாணவர்களும், 2 போலீஸாரும்காயமடைந்தனர்.

போலீஸார் 47 மாணவர்களைக் கைது செய்து மாலையில் ஜாமீனில் விடுவித்தனர். கல்லூரிப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+