தங்க வியாபாரி மர்மச்சாவு: 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தங்க வியாபாரியின் சாவுக்குக் காரணமான மூன்று கான்ஸ்டபிள்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட நகைகளை வைத்திருந்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டார் காஜா மொய்தின். வயது 35. ஆந்திராவைச் சேர்ந்த இவர் சென்னைக்கு வந்து தங்கவியாபாரம் செய்து வருபவர்.

போலீசார் இச்சம்பவம் குறித்துக் கூறுகையில், பிப்ரவரி 10 ம் தேதி திருட்டுக் கும்பல் ஒன்று வீடு ஒன்றிலிருந்து 57 சவரன் நகைகளைக்கொள்ளையடித்தது. இந்த நகைகளை அவர்கள் காஜா மொய்தினின் கடையில் விற்றனர். திருடப்பட்ட நகைகளை வைத்திருந்தது தொடர்பாக இவர் கைதுசெய்யப்பட்டார்.

மேலும் காஜா மொய்தின் அவ்வப்போது திருடப்பட்ட நகைகளை வாங்கி வந்துள்ளார். மேலும் பிப்ரவரி மாதம் சென்னையில் பல வீடுகளில் கொள்ளைநடந்து வந்தது. இதையடுத்து காஜா விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விசாரணையில், திருட்டுக் கும்பலிடமிருந்து நகைகளை வாங்கியதாக ஒப்புக் கொண்டார். மேலும் தனது வீட்டில் சில நகைகளை வைத்திருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை போலீசார், திருடப்பட்ட நகைகளைத் திரும்பப் பெறுவதற்காக அவரை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.அப்போது காஜா தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த நகைகளைக் கொடுத்தார்.

அடுத்த நிமிடம் அவர் தன் வீட்டில் வைத்திருந்த ரசாயன திரவத்தைக் குடித்தார். இதையடுத்து ஸ்டான்லே மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார் என்று போலீசார் கூறினர்.

ஆனால் காஜா வின் உறவினர்கள் கூறுகையில், போலீசார் காஜாவைக் கைது செய்தது மட்டுமின்றி, வற்புறுத்தி நகைகளை தரச் சொல்லி அவரை வலுக்கட்டாயமாக விஷத்தை அருந்த வைத்தனர். போலீசாரின் துன்புறுத்தல்கள் காரணமாக அவர் மனம் வெறுத்துப் போய் விஷம் குடித்து இறந்தார்என்றனர்.

இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+