மூப்பனார் பிடிவாதம்: என்ன செய்ய போகிறார் ஜெ?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Moopanarதமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மொத்தம் 50 சட்டசபைத் தொகுதிகள் கொடுக்க வேண்டும், புதுவையில் அதிமுக கூட்டணிவெற்றி பெற்றால், முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவுக்குமூப்பனார் நிபந்தனை விதித்துள்ளார்

தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தொடர்ந்து மெளனமாக இருந்து வருகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ள 45 இடங்களை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்த கட்சியின் பல்வேறு மட்டத் தலைவர்கள் மற்றும்காங்கிரஸ் தலைவர்களுடன் மூப்பனார் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்னும் தெளிவான முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமையும் மூப்பனாரின் ஆலோசனைப் படலம் தொடர்ந்தது. கட்சியின் தேர்தல் பணிக் குழுக் கூட்டத்தைக் கூட்டி அவர் விவாதித்தார். இக்கூட்டத்தில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயந்தி நடராஜன், சோ.பாலகிருஷ்ணன், என். எஸ்.வி.சித்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின்போது, ஜெயலலிதாவின் 45 சீட் விவகாரம் குறித்து பேசப்பட்டது. அப்போது 50 சீட்டுகள் கொடுக்க வேண்டும், புதுவையில் முதலில்ஆட்சியமைக்க காங்கிரசுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஜெயலலிதாவிடம் கூறுவது என்று முடிவெடுக்கப்பட்டதாகத்தெரிகிறது.

இந்த நிபந்தனைகள், ஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும்தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிபந்தனைகளை ஜெயலலிதாவும், புதுவை ஆட்சி குறித்த கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சியும் ஏற்றுக் கொண்டால் கூட்டணிக் குழப்பம்நீங்கும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+