கோவை பல்கலையில் இரட்டைப் பட்டப்படிப்பு முறை அறிமுகம்
கோவை:
கோவை பாரதியர் பல்கலைக் கழகத்திலுள்ள தொலைதூரக் கல்வி முறையில் இரட்டைப் பட்டப்படிப்பு முறை வரும்கல்வியாண்டிருந்து அறிகப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து கோவை பாரதியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இன்னாசி முத்து நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் மாணவ, மாணவியர்கள் வசதிக்காகவும், ஆசிரியர்களின் நலனுக்காகவும்ஒரு மருத்துவ மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் இவர்களுக்கு இலவச ஆலோசனைகள்வழங்கப்படும்.
வருங்காலத்தில் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டங்கள் பற்றியும், மாணவர்களின் நலன் குறித்தும் விளக்கபாரதியார் கவுன்சிலிங் மையம் துவங்கப்படவுள்ளது. மேலும் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள், வாய்ப்புகள்குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், பிரபல நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்குத்தகுதியான மாணவர்களை அளிக்கவும் உத்தேசித்து வருகிறோம்.
எஸ்.சி எஸ்.டி மாணவர்கள் எதாவது ஒரு பாடப்பிரிவில் கல்வி பயில விரும்பி சேர்ந்தால், அவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். மேலும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்,தொலைதூர வகுப்பில் சேர்ந்து இரட்டைப் பட்டங்கள் பெற வழி செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகம் முழுவதும் இன்டர்நெட் வசதி செய்யப்பட்டுள்ளது. நூலகத்தில் புதிய கம்ப்யூட்டர் சி.டிக்கள்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த கல்வியாண்டிலிருந்து பல்கலைக் கழகத்தில் 5 புதிய பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.எம்.எஸ்சி இன்டஸ்டியல் பயோடெக்னாலஜி, எம்.எஸ்சி மொபைல் கம்யூனிகேஷன், எம்.ஏ எஜூகேஷனல்கம்யூனிகேஷன், எம்.எஸ்சி பயோ இன்பர்மேடிக்ஸ் ஆகியவை இந்தப் புதிய பட்டப்படிப்புகளில் அடங்கும். இந்தபட்டப்படிப்பிற்கு மாணவர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 300விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications