குருச்சேத்ராவில் வாஜ்பாய்
குருச்சேத்ரா (ஹரியானா):
வேதியர்களின் வேத கானம் மற்றும் சங்குகளின் சங்கநாதத்திற்கிடையே பிரம்மசரோவர் ஏரியின் தென்பகுதி நடைபாதை அமைக்கும் பணிக்கு அடிக்கல்நாட்டினார் பிரதமர் வாஜ்பாய்.
மகாபாரத கதையில் வரும் பாரதப்போர் நிகழ்ந்த புண்ணிய பூமியான குருச்சேத்ராவில் உள்ள இந்த ஏரியில் சூரிய கிரகணத்தின் போது நீராடுவது கும்பமேளாநீராடல் போன்று புண்ணியமானது என கருதப்படுகிறது. மறைந்த மூதாதையர்களின் நினைவாக தர்ப்பணம் செய்தல் போன்ற இந்துக்களின் சடங்குகள் இங்குநடைபெறுவது வழக்கம்.
மகாபாரதப் போருக்கு முன்பே குரு என்னும் அரசரால் உருவாக்கப்பட்ட இந்த ஏரியில் ஒரே நேரத்தில் 2 லட்சம் பேர் வரை புனித நீராடலாம். இதன்வளர்ச்சி பணிகளை குருசேத்ரா வளர்ச்சி வாரியம் மேற்கொண்டு வருகிறது.
1981ல் 2.5 கோடி ரூபாய் செலவில் ஏரியின் கிழக்குப்பகுதிக்கான வேலைகள் முழுமை பெற்றதையடுத்து 1984 ல் இரண்டாம் கட்டமாக ஏரியின்மேற்குபகுதிக்கான வேலைகள் 2.2 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டது.
3.6 கோடி ரூபாய் செலவில் நடைபெறவுள்ள இறுதிக்கட்ட பணியில் ஏரியின் தென்பகுதிக்கான நடைபாதை மற்றும் இரு பிரார்த்தனை கூடங்கள்இவற்றோடு ஏரியை சுற்றி தோட்டமும் அமைக்கப்பட உள்ளது.
குருச்சேத்ராவில் செவ்வாய்க்கிழமை இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்த பிரதமர் வாஜ்பாய், அங்கு நடைபெற்ற யாகத்திலும் கலந்து கொண்டார்.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications