த.மா.கா அலுவலகத்தில் சிதம்பரம் கொடும்பாவி எரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அ.தி.மு.கவுடன் த.மா.கா கூட்டணி வைத்துக் கொண்டதற்கு சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தமாகா தொண்டர்கள் சத்தியமூர்த்தி பவனில்ப.சிதம்பரத்தின் கொடும்பாவியை எரித்தனர்.

முன்னதாக, அ.தி.மு.க.வுடன் த.மா.கா இணைந்தது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று த.மா.கா மூத்த உறுப்பினரும், முன்னாள் மத்தியநிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் ஆலோசனையை தமிழ் மாநில காங்கிரஸ் நிராகரித்தது.

இதற்கிடையே, த.மா.கா தொண்டர்கள், சத்தியமூர்த்தி பவனில் ப.சிதம்பரத்தின் கொடும்பாவியை எரித்தனர்.

அ.தி.மு.க வுடன் த.மா.கா கூட்டணி வைத்துள்ளதை ப.சிதம்பரம் கண்டித்தது மட்டுமின்றி, இதுகுறித்து த.மா.கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார். அ.தி.மு.க கூட்டணிக்கு அதிருப்தி தெரிவித்து த.மா.கா எம்.எல்.ஏ. ஹாருண் கட்சியிலிருந்து விலகி தி.மு.க வில் சேர்ந்தார்.அதே போல்ரங்கநாதன், எம்.எல்.ஏ.வும் தமாகா விலிருந்து விலக உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

முன்னதாக, 1996 ம் ஆண்டு அ.தி.மு.க வுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று மூப்பனார் கூறினார். அப்போது மூப்பனார் ஆதரவாளர்கள் காங்கிரஸ்தலைவர் நரசிம்மராவின் கொடும்பாவியை எரித்தனர்.

இப்போது, மூப்பனார் 1996 ம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணியில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைப்போல் ப.சிதம்பரம் அ.தி.மு.க வுடன் த.மா.கா கூட்டணிவைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 150 க்கும் மேற்பட்ட மூப்பனார் ஆதரவாளர்கள் சிதம்பரத்தின் கொடும்பாவியை எரித்தனர்.

சிதம்பரத்துக்குக் கடும் கண்டனம்:

அ.தி.மு.க கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளதையடுத்து அவருக்கு த.மா.கா வில் எதிர்ப்பு வலுக்கிறது.

இதற்கிடையே, த.மா.கா தேர்தல் குழு உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், சித்தன், சோ.பாலகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில்,

ப.சிதம்பரத்தை வளர்த்து விட்ட கட்சி த.மா.கா. அந்த நன்றி விசுவாசம் இல்லாமல் அவர் அ.தி.மு.க.வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துஅறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்.

அ.தி.மு.க வுடனான தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் ஜெயலலிதாவுடன் நடந்த தேர்தல் குறித்தான உடன்பாடு ஆகியவை குறித்துஒவ்வொரு முறையும் மூப்பனார் தொலைபேசி மூலம் சிதம்பரத்துக்குத் தகவல் கொடுத்தார்.

இந்த நிலையில் என்னை த.மா.கா மதிக்கவில்லை. எனக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்ப.சிதம்பரம்.

இவ்வாறு த.மா.கா தேர்தல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+