2 கம்யூ. கட்சிகளும் செயற்குழுவைக் கூட்டுகின்றன
சென்னை:
அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே இன்னும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை.செவ்வாய்க்கிழமை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது செயற்குழுக் கூட்டங்களைக் கூட்டியுள்ளனர். அதன் முடிவில், மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
அதிமுக கூட்டணியில், இதுவரை பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன்மட்டுமே தொகுதிப் பங்கீடு முடிவாகியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இன்னும் தொகுதிப் பங்கீடு முடியவில்லை.இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கேட்கும் தொகுதிகளை கொடுக்க ஜெயலலிதா தயாராக இல்லை என்பதால்,பேச்சுவார்த்தையில் ஒரு முடிவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் அதிமுக தரப்பில் ஓ.எஸ்.மணியன் மற்றும் தம்பித்துரை ஆகியோர் அடங்கிய குழு, இருகம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர். ஆயினும் இழுபறியே நீடித்தது.
இந்தச் சூழ்நிலையில், திங்கள்கிழமை இரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் மீண்டும் போயஸ் கார்டன் சென்றுஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர். அப்போது புதிய திட்டம் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.
ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணுசெய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய திட்டம் ஒன்றை ஜெயலலிதா கூறியுள்ளார். அதுகுறித்து எங்களது கட்சித்தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்வோம். செவ்வாய்க்கிழமைகட்சியின் செயற்குழு கூட்டப்பட்டுள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவை கட்சித் தலைமையிடம் தெரிவிப்போம்.அதன் பிறகு எங்களது முடிவை அறிவிப்போம் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரதராஜன் கூறுகையில், ஒரு முடிவும் ஏற்படவில்லை. செவ்வாய்க்கிழமைமுடிவு தெரிய வரலாம் என்றார்.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications