சித்திரைத் திருவிழாவுக்குப் பின் தேர்தல்?
சென்னை:
தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தத் தயார் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிமிருத்யுஞ்சய் சாரங்கி கூறியுள்ளார்.
டெல்லியில் மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றிருந்த சாரங்கி,செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகசட்டசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து டெல்லி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வாக்காளர் அடையாள அட்டைகள் விநியோகம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் பயன்பாடு ஆகியவைகுறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. எப்போதுவேண்டுமானாலும் தேர்தல் நடத்தத் தயாராக உள்ளோம்.
இருப்பினும் மே 4 முதல் 7-ம் தேதி வரை மதுரையில், உலகப் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா நடக்கவுள்ளதால்,அந்தத் தேதிகளில் தேர்தல் நடத்த வேண்டாம் என்று யோசனை கூறியுள்ளோம்.
தேர்தல் குறித்து மத்திய தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைதேர்தலில் பயன்படுத்த ஆர்வமாக உள்ளோம். இருப்பினும் இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு இருப்பதால் முடிவைபொறுத்து அது அமல்படுத்தப்படும் என்றார் சாரங்கி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications