நாடாளுமன்றத்தில் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி:
ஆயுதப் பேர ஊழல் குறித்து ராஜ்ய சபாவிலும், லோக்சபாவிலும் எதிர்க்ட்சிகள் கோஷமிட்டதைத் தொடர்ந்து இரு அவைகளும் வியாழக்கிழமையும்ஒத்தி வைக்கப்பட்டன.
வாஜ்பாய் உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷமிட்டனர். ராஜ்ய சபா உறுப்பினர் சுரேஷ் பச்சோரிவாஜ்பாய் பதவி விலகியே தீர வேண்டும் என்று கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தார். எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்துகூச்சலிட்டனர். இதையடுத்து ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டது.
லோக்சபாவும் ஒத்திவைப்பு:
முன்னதாக லோக்சபாவில் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ், மத்திய தொழில்துறைஅமைச்சர் முரசொலி மாறன் ஆகியோர் இருந்தனர்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மெளனமாக அமர்ந்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பூட்டா சிங், சதுர்வேதி ஆகியோர் ஆயுதப்பேர ஊழல் குறித்து தொடர்ந்து கோஷமிட்டபடியே இருந்தனர்.
காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் பாலயோகி அவர்களை அமைதிப்படுத்தசெய்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.
சபையில் தொடர்ந்து கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டதால் சபையை சபாநாயகர் பாலயோகி ஒத்திவைத்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications