ஆயுத பேர ஊழல்: விசாரணை நடத்த நாயுடு கோரிக்கை
ஹைதராபாத்:
இந்தியப் பாதுகாப்புத் துறையில் நடந்துள்ள ஆயுதப் பேர ஊழல் வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைநகர் ஹைதராபாத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண் மற்றும் சமதாகட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது டெஹல்கா டாட் காம்இன்டர்நெட் நிறுவனம்.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பையே சீர்குலைக்கும் அளவுக்குநடந்துள்ள இந்த ஊழலில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்துவிசாரணையை இப்போதே தொடங்க வேண்டும்.
இருப்பினும் தெலுங்கு தேசம் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகாது. டெஹல்கா டாட் காம்இன்டர்நெட் நிறுவனத்தார் கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபணமாகும் வரை தெலுங்கு தேசம்கட்சி எவ்வித அவசர முடிவுகளையும் எடுக்காது.
தெலுங்கு தேசம் கட்சி இதுகுறித்து வாஜ்பாயிடம் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்துஉயர்மட்ட அளவில் விசாரணை நடத்தப்படும் என்று வாஜ்பாய் வாக்குறுதி அஹித்துள்ளார்.
இதே டெஹல்கா டாட் காம் கடந்த மாதம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் இந்தியாவிலேயே மிகப்பணக்காரஅரசியல்வாதி சந்திரபாபு நாயுடு என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாயுடு மறுத்து வந்தார். இது ஆந்திரசட்டசபையிலும் கடந்த பிப்ரவரி மாதம் எதிரொலித்தது.
முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே இரண்டாவது மிகப்பெரிய கட்சி தெலுங்கு தேசம். தேசியஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த 29 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications