இலவச வேட்டி ஊழல்: 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலவச வேட்டி சேலை ஊழல் வழக்கில் தொடர்புடைய தமிழ்நாடு ஜவுளி கழகக் முன்னாள் நிர்வாக இயக்குநர்நரசிம்மலு மற்றும் 2 பேருக்கு வியாழக்கிழமை சிறப்பு நீதிபதி அன்பழகன் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைவிதித்துத் தீர்ப்பளித்தார்.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது ஏழை மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கியதில் ரூ 1.66கோடி ஊழல் நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த வழக்கு சிறப்பு நீதிபதி அன்பழகன் முன்னிலையில் நடந்து வருகிறது. வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்குவந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி அன்பழகன், இதில் தொடர்புடைய தமிழ்நாடு ஜவுளிக் கழக முன்னாள்நிர்வாக இயக்குநர் நரசிம்மலு, முன்னாள் அமைச்சர் மதுசூதனனின் உறவினர் ஜெயபிரகாஷ் மற்றும் இலவசசேலை, வேட்டி வழங்குவதில் விநியோகத்தில் உதவி புரிந்த தேவானந்தன் ஆகியோருக்கு 2 வருட கடுங்காவல்தண்டனையும், ரூ 16,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பாலசுப்ரமணியம் மறறும் துவாரகாந்தன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக, 1993 ம் ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது தமிழகத்தில் வாழும் ஏழை மக்களுக்கு இலவசவேட்டி சேலை வழங்கியதில் ரூ 1.66 கோடி ஊழல் நடந்தது. இவ்வழக்கில் 1998 ம் ஆண்டு ஏப்ரல் மாதம்குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் முக்கியக்குற்றவாளியான அதிமுக முன்னாள் அமைச்சர் மதுசூதனனுக்கு ஏற்கனவே இரண்டு ஆண்டுகள்கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+