வாஜ்பாய் பதவியில் தொடரக் கூடாது: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆயுத பேர ஊழல் வழக்கில் தொடர்புடைய வாஜ்பாய் அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை தெரிவித்தார்.

அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:

பாஜக தலைவர் பங்காரு லட்சுமண் மற்றும் சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி ஆகியோர் ஆயுதப் பேரஊழலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இருவரும் லஞ்சம் வாங்கியது வீடியோவில் அழகாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

வீடியோ கேமிராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், ஆயுதப் பேர ஊழலில் இவர்கள் இருவரும் ஈடுபட்டுள்ளனர்என சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளது.

இதுவே இவ்வழக்கில் முக்கியமான ஆதாரமாகும். இந்த ஊழல் குற்றச்சாட்டுக்குத் தார்மீகப் பொறுப்பேற்றுவாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும். இனிமேல் ஒரு நொடி கூட வாஜ்பாய் பதவியில் நீடிக்கக் கூடாது.

நாட்டின் பாதுகாப்பையே சீர்குலைக்கும் வகையில் இந்த ஊழல் நடந்துள்ளது. டெஹல்கா டாட் காம் நிறுவனத்தார்இந்த ஊழலை வெளிக்கொண்டு வருவதற்காக ரூ 1,300 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் மேலும் ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள்வாங்கியதிலும், விற்றதிலும் பல குற்றச்சாட்டுக்கள் இருந்தது. ஆனால் அது வெளியில் தெரியாமல் மூடி மறைத்துவைத்து விட்டனர்.

தற்போது பாஜக வினர் கையும், களவுமாக பிடிக்கப்பட்டுவிட்டனர். ஏற்கனவே, முன்னாள் கடற்படை தளபதிவிஷ்ணு பகவத், ஜார்ஜ் பெர்னான்டஸ் மேல் வழக்குகள் இருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்ததை இப்போது நினைவுகூற வேண்டும்.

இந்தியாவையே அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டது ஆயுதப் பேர ஊழல். இதற்கு தார்மீகப் பொறுப்பேற்றுவாஜ்பாய் அரசும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள திமுக அரசும் பதவி விலக வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+