டெல்லியில் திபெத்திய மதத் தலைவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மதங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாட்டால் பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளதாக சீனாவிலிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம்புகுந்த திபெத்திய மத தலைவரான கர்மபா (திபெத்திய மத வாரிசு) டெல்லி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

இந்தியாவில் தஞ்சமடைந்த பின் அரசு அளித்த தர்மசாலா இல்லம் ஒன்றில் இருந்த கர்மப்பா தற்போது புத்த மத தலஙகளுக்கு விஜயம் செய்து வருகிறார்.கடந்த 2 வாரங்களாக வாரணாசி, புத்த கயா, சாரநாத் போன்ற புத்தசமய தலங்களுக்கு சென்ற பின் புதன்கிழமையன்று டெல்லி வந்தார்.

டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கர்மப்பா தனது சுருக்கமான உரையில் கூறியதாவது:

மதங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன. அனைத்து மதங்களும் பேதமின்றி செயல்பட்டால்மனித குலத்திற்கு தேவையான அமைதி கிட்டும்.

விஞ்ஞான துறை வளர்ச்சி அடைந்த அளவிற்கு ஆன்மீக துறை வளர்ச்சி அடையவில்லை. இரண்டு துறைகளும் சம அளவில் வளர்ச்சி பெறும் போது மனிதஇனத்திற்கு அமைதி கிடைக்கும் என்றார்.

சீனாவிலிருந்து தப்பி வந்தது குறித்து குறிப்பிடுகையில், தான் இந்தியாவில் தஞ்சமடைந்ததால், தனது குடும்பத்தினர் மற்றும் தனது மடாலய துறவிகள்உள்ளிட்ட பலருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திபெத்திய மதத்தலைவர்களில், தலாய் லாமா மற்றும் பஞ்சிம் லாமாவிற்கு அடுத்தபடியாக 3 வது இடத்தில் வைத்து மதிக்கப்படுகிறார் 14 வயதானகர்மப்பா. திபெத்திய புத்தமத பிரிவான கர்ா காக்யூவின் தலைவராக உள்ளவர் கர்மப்பா.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பி.ஜே.துங்கன், முன்னாள் மக்களவை தலைவர் ரபி ரே, காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே உள்ளிட்டபிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சீனாவின் உதவியுடன் இந்தியாவிற்கு உளவு பார்க்க வந்தவர்தான் கர்மபா என்ற குற்றச்சாட்டை டெல்லி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த விழாஅமைப்பாளர் லாமா லாப்ஸாங் மறுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், திபெத் பகுதி விடுதலை செய்யப்பட்ட பின்தான் கர்மப்பா திபெத் திரும்புவார். டெல்லியில் மார்ச் 17ம் தேதி வரை தங்கஇருக்கும் கர்மப்பா, ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதி, பங்க்ளா சாகிப் குருத்வாரா போன்றவற்றிற்கு செல்வார்.

பின்னர் மார்ச் 17ம் தேதி புத்த ஜெயந்தியை ஒட்டிய பிரார்த்தனை ஒன்றிலும் அவர் கலந்து கொள்வார் என தெரிவித்தார்.

ஐ.ஏ.என்.எஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+